உங்க பேரனுக்கு போஸ்டர் அடிக்க முடியாது! திமுகவிலிருந்து விலகிய சேலம் MP.எழில்!
DMK Selam MP EZhil Arasan Resign
திமுக ஆட்சியில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லாததால், திமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய ஒன்றிய பிரதிநிதி எழில்அரசன், திமுக'வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்டக் கழகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய ஒன்றிய பிரதிநிதியாக செயல் பட்டு வந்த சேலம் MP.எழில்அரசன் ஆகிய நான் 04.02.2025 இன்று முதல் கீழ்காணும் காரணங்களால் கட்சியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன்.
திமுக ஆட்சிகளில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை, கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை.
பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை, இதற்கு நாங்கள் தயாராக இல்லை.
எனவே இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது நாள்வரை ஒத்துழைப்பு நல்கிய கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி" என்று சேலம் MP.எழில்அரசன் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் விரவில் விசிக அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
English Summary
DMK Selam MP EZhil Arasan Resign