சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; போலீஸ் விசாரணை தீவிரம்! - Seithipunal
Seithipunal


சேலம் அண்ணா பூங்கா அருகே வைக்கப்பட்டிருந்த மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலை மீது பெயிண்ட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலையின் மார்பு மற்றும் கால் பகுதிகளில் கருப்பு பெயிண்ட் தூவி அவமதிக்கப்பட்டது, இன்று அதிகாலை தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவியது. திமுக ஆதரவாளர்கள் சிலர் கண்டனமெழுப்ப, காவல்துறையினர் சிலைக்கு அருகில் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் சூழ்நிலையை முன்னிட்டு, மாநில அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்கள் பரப்புரை தீவிரமடைந்த நிலையில், இந்தச் சம்பவம் திட்டமிட்டு நடந்ததா? அல்லது தனிநபரின் செயலா? என்பதற்கான கேள்விகள் எழுந்துள்ளன.

சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்கள் பரிசோதிக்கப்படுகின்றன. சிலையில் பெயிண்ட் வீசிய நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Salem Karunanidhi statue attacked paint


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->