வெட்கம் இல்லையா அண்ணாமலை! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! - Seithipunal
Seithipunal


ரூ.17 கோடி சாராய கம்பெனியில் இருந்து நன்கொடை பெற்ற பாஜக!

நேற்று தீபாவளி முன்னிட்டு டாஸ்மார்க் மது விற்பனை மூலம் ரூ.708 கோடி தமிழக அரசு வருவாய் இயற்றியதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இது போன்ற பொய் செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். குறிப்பிட்ட ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

இதனை எதிர்த்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் "கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? 

சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரமிருந்தால், மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும்? கோபாலபுரத்தின் குடும்ப தொலைக்காட்சியான சன் நியூஸ் இந்த சாராய விற்பனை மூலம் வந்த வருமானத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்கு தொடுப்பீர்களா? 

அவர்கள் மீது வழக்கு தொடுத்தாலும், உங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக பாஜக குரல் கொடுக்கும். பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பத்திரிகையாளர்களை விட்டு விட்டு என் மீது வழக்குத் தொடுங்கள். சாராய அமைச்சரின் இந்த நடவடிக்கை முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பெயரில் நடக்கிறதா அல்லது சாராய அமைச்சரே தன்னிச்சையாக செயல்படுகிறாரா?" என்ன கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இந்த விமர்சனத்திற்கு தற்போதைய திமுக தலைமைக் கழக செய்தி தொடர் இணைச் செயலாளரும் முன்னாள் நாம் தமிழர் கட்சியின் தம்பியுமான ராஜீவ் காந்தி "சாராயம் விற்று பிழைப்பை நடத்தும் உங்களுக்கு.......-அண்ணாமலை

பாஜக 2020 21 ஆம் ஆண்டு சாராய கம்பெனிகளிடம் வாங்கிய நன்கொடை (ஓசி) மட்டும்..

மொத்தம் 17 கோடி ரூபாய்!!

மற்றவர்களை குறை சொல்ல வெட்கம் இல்லை" என அண்ணாமலையை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் பாஜக வாங்கிய நன்கொடை தொடர்பான ஆவணத்தின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அதில் 2017 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் கால்ஸ் டிஸ்லரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாயும், 2022 ஆம் ஆண்டு மட்டும் எஸ்.என்.ஜே டிக்ஸ்னரிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து ஆறு கோடி ரூபாயும் பாஜக நன்கொடையாக பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சாராயத் துறை அமைச்சர் என அழைக்கும் அண்ணாமலை. சாராயக் கம்பெனியிலிருந்து நிதி பெற்று கட்சி நடத்தும் உங்களை எந்த பெயர் வைத்து அழைப்பது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Rajiv Gandhi reply to annamalai statement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->