இது ‘ஜனநாயகப் படுகொலை’ - முகக்கவசம் அணிந்து நாடாளுமன்றம் எம்.பி.,க்கள்.!
dmk MPs suspend issue july
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ஜனநாயகப் படுகொலை’ என்று, அச்சிடப்பட்ட முகக்கவசம் அணிந்து பிற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றம் வந்தனர்.
நேற்று மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக திமுக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட, 19 பேரும், மக்களவையில் 4 காங்கிரஸ் எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்க்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், இது ‘ஜனநாயகப் படுகொலை’ என்று முகக்கவசம் அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இன்று நாடாளுமன்றம் வந்துள்ளனர்.
எம்.பி.க்கள் இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிற திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி,க்கள் ‘ஜனநாயகப் படுகொலை’ என அச்சிடப்பட்ட கருப்பு நிற முகக்கவசம் அணிந்து நாடாளுமன்ற கூட்டத்திற்கு வருகை தந்தனர்.
English Summary
dmk MPs suspend issue july