ஒரே நாடு ஒரே தேர்தல்; அதெல்லாம் வர வாய்ப்பே இல்லை! அடித்து சொல்லும் டி.ஆர் பாலு! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் அனைத்து விதமான தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கான முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. அதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த குழுவின் முதல் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பெண்களுக்கான பல்வேறு பணிகளையும் கடமைகளையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆற்றுகிறார்கள். தேர்தல் உறுதி மொழியில் இல்லாத திட்டங்களையும் அவர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பெண்களுக்காக ஆற்ற வேண்டிய கடமைகளை மிகச் சிறப்பாக ஆற்றிக் கொண்டிருக்கிறார். எனவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் வருமா என கேள்வி எழுப்பினர். அதெல்லாம் வராது, அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். ஒரே நாடு ஒரே தேர்தல் வருவதற்கு வாய்ப்பே இல்லை என அழுத்தமாக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP TRBalu said there is no one nation one election


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal