அதிமுகவில் இருந்து தவெகவிற்கு தாவிய மூன்று எம்.எல்.ஏ.க்கள்; எதிர்வினையாற்றியுள்ள திமுக எம்பி..! - Seithipunal
Seithipunal


அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர், தங்களது எம்எல்ஏ பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.  இதனை திமுக எம்.பி வில்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து வில்சன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;

''கடந்த 21 நாட்களுக்குள், கட்சித் தாவல் புகாரில் சிக்கிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் நோக்கில், அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த உடனேயே தலைமைச் செயலக வளாகத்திலேயே தவெகவில் இணைந்துள்ளனர்.

தலைமைச் செயலகத்தையும், அங்குள்ள அதிகாரப்பூர்வ அறைகளையும் அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தியது மிகுந்த கண்டனத்திற்குரியது.

தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக இந்த மூன்று தொகுதிகளையும் சார்ந்த மக்கள் மீது தற்போது தேர்தல் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஆறு மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டிய மற்றொரு இடைத்தேர்தலுக்காக, கணிசமான அளவிலான பொதுமக்களின் பணமும் நேரமும் வீணடிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MP Reacts to the Three MLAs Who Defected from AIADMK to TVK


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->