தமிழக அமைச்சரவையில் புதிய முகத்திற்கு வாய்ப்பு... ரீ-என்ட்ரி கொடுக்கும் முக்கிய புள்ளி! அதிரடி மாற்றம்... பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


அடுத்த சில தினங்களில் தமிழக அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக ஆட்சிக்கு பொறுப்பு வந்த மூன்று ஆண்டுகளில், இரண்டு முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் அமெரிக்கா பயணம் செல்வதற்கு முன்னதாகவே, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்தன. 

குறிப்பாக அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அது பழுப்பதற்கு உண்டான நேரம் நெருங்கி விட்டதாக, திமுகவின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருகின்ற 23ஆம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றப்படலாம் என்றும், இந்த அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது. 

மேலும் தற்போது இருக்கக்கூடிய அமைச்சர்கள் சிலர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாகவும், ஏற்கனவே அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் வெளியான அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, திமுக எம்எல்ஏ ஒருவர் அமைச்சராக தேர்ந்தெடுக்க பட உள்ளதாகவும், குறிப்பாக அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களில் இருந்து அந்த அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து அந்த அமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. ஐஏஎஸ் அதிகாரிகளின் மாற்றத்தை தொடர்ந்து, தற்போது இந்த அமைச்சரவை மாற்றமும் அதிரடியாக இருக்கும் என்றும் வெளியான அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Minister Cabinet Change soon


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->