திமுக–ஐயூஎம்எல் தொகுதி பேச்சுவார்த்தை! ஸ்டாலின் கையில் எடுத்த செம வியூகம்! 2 இடங்களுக்கு ஒப்புதல்? ஸ்டாலினின் மாஸ் பிளான்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, திமுக – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) இடையிலான பேச்சுவார்த்தை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்க திமுக தலைமை முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி.ஆர். பாலு தலைமையில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்ட நிலையில், முதலாவது கட்சியாக ஐயூஎம்எலை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அரசியல் ரீதியாக முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

ஐயூஎம்எல் தரப்பில் 5 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக தரப்பு 2 தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021 தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட ஐயூஎம்எல், அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த முறை வழங்கப்பட்ட 3 தொகுதிகளில் ஒன்றை குறைத்து 2 ஆக ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதனை அரசியல் பார்வையாளர்கள் “முதற்கட்ட சிக்னல் அரசியல்” எனக் குறிப்பிடுகின்றனர்.

முதலில் IUML-ஐ அழைத்தது ஏன்?

நீண்டகாலமாக திமுக கூட்டணியில் சிக்கல் இல்லாமல் இருந்து வரும் கட்சியாக ஐயூஎம்எல் பார்க்கப்படுகிறது. ஒரு தொகுதியை குறைத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்காமல் சமரசமாக இருப்பார்கள் என்ற கணக்கில் முதலில் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது,ஐயூஎம்எல் ஒரு தொகுதியை விட்டுக்கொடுத்தது முன்னுதாரணமாக இருக்கும்.அதன்பின் மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, மதிமுக போன்ற கட்சிகளிடமும் அதே கோரிக்கை வைக்கலாம்.புதிய கட்சிகளின் வருகையை காரணம் காட்டி மற்ற கட்சிகளையும் சமரசத்திற்கு கொண்டுவரலாம்.

இந்த கணக்கிலேயே ஸ்டாலின் தலைமையிலான திமுக முதலில் முஸ்லீம் லீக்கை அழைத்ததாக அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன், 5 தொகுதிகளை கோரியிருப்பதாகவும், குறைந்தபட்சம் 4 தொகுதிகளாவது வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

“தமிழ்நாட்டில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் வாக்காளர்கள் உள்ளனர். 234 தொகுதிகளிலும் எங்கள் சமுதாய வாக்குகள் உள்ளன. அதனால் தான் அதிக தொகுதிகள் கேட்டோம்” என்றார்.

மேலும்,

  • கடந்த முறை 3 தொகுதிகள் வழங்கப்பட்டதாக,

  • இந்த முறை ஒன்றை விட்டுக் கொடுக்க வேண்டுமென திமுக கூறியதாக,

  • ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், “எந்த சூழலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம். 4 கொடுத்தாலும் சரி, 3 கொடுத்தாலும் சரி, 2 கொடுத்தாலும் சரி – எங்கள் நிலைப்பாடு மாறாது” எனத் தெளிவுபடுத்தினார்.

ஐயூஎம்எல் தனது அங்கீகரிக்கப்பட்ட “ஏணி” சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என்றும், உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் கேள்வியே இல்லை என்றும் காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

நாளை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளன. இக்கட்சிகளும் தொகுதி எண்ணிக்கையில் சமரசம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொகுதி எண்ணிக்கையை குறைக்க மறுக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை பின்னர் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

திமுக – ஐயூஎம்எல் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தாலும், இறுதி ஒப்பந்தம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் “தியாக அரசியல்” கோரிக்கையை முன்வைத்து, புதிய கட்சிகளுக்கும் இடம் வழங்கும் வகையில் திமுக வியூகம் அமைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

தொகுதி பங்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை அரசியல் களம் சூடுபிடித்தே இருக்கும் என்பது உறுதி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK IUML constituency talks Stalin clever strategy Approval for 2 seats Stalin mass plan


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->