திமுகவிற்கு அருகதை இல்லை...! காமராஜரை கேவலப்படுத்தி... ச்சா...! - அண்ணாமலை
DMK has no mercy They are insulting Kamaraja Annamalai
சென்னை சைதாப்பேட்டை கோர்ட் வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது," ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் சொத்துக்களை சேர்க்காமல் தனது கடைசி காலம் வரை எளிமையாக வாழ்ந்தவர் காமராஜர்.

கர்மவீரர் காமராஜரை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு அருகதை இல்லை. வரலாற்றை மாற்றி, திரித்து ஆளும் தி.மு.க., கர்மவீரர் காமராஜரை கேவலப்படுத்தி உள்ளனர். இதை கண்டிக்கிறேன்.
இதற்காக காங்கிரஸ் தலைவரின் வெறும் கண்டன அறிக்கை மட்டும் போதுமா? உண்மையாகவே காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வரத் தயாரா?
குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்ற தனித்துப்போட்டியிடத் தயாரா? தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர்" என்று தெரிவித்தார்.
English Summary
DMK has no mercy They are insulting Kamaraja Annamalai