"நீதிக் கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல்": முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி!
DMK GOvt is neethi katchi model MK Stalin
சென்னை: நீதிக் கட்சி தொடங்கப்பட்ட நவம்பர் 20-ஆம் தேதியை, 'நம் உரிமைக்குரலின் உதயமான நாள்' என்று குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீதிக் கட்சியின் லட்சியங்களின் தொடர்ச்சியே 'திராவிட மாடல்' ஆட்சி என்று தொடர்ந்து மெய்ப்பிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
நீதிக் கட்சி குறித்த பதிவு
நீதிக் கட்சி தொடங்கிய நாள் குறித்து இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமூக நீதி லட்சியம்: "நம் உரிமைக்குரலின் உதயம்! இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற பிராமணரல்லாதோர் அறிக்கையைச் செயல்படுத்திக் காட்ட, நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சி: நீதிக் கட்சியின் கொள்கைகளின் நீட்சியே தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி என்றும், அதைத் தொடர்ந்து மெய்ப்பிப்போம் என்றும் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
எச்சரிக்கை: "சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்!" என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
சமூக நீதி மற்றும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஆகிய கொள்கைகளுக்காக 1916-இல் நீதிக் கட்சி (Justice Party) தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
DMK GOvt is neethi katchi model MK Stalin