சட்டவிரோத டாஸ்மாக் பார்! கண்காணிக்க சென்ற தனிப்படை போலீஸாரை தாக்கிய திமுக நிர்வாகி! - Seithipunal
Seithipunal


அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாரில் மதுமானம் விற்கப்படுவதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற போலீசாரை அந்தப் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் தாக்க முயற்சி செய்து உள்ளனர்.

காரைக்குடி அருகே உள்ள வனக்காடு கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனை அறிந்த போலிசார்  தனிப்படை அமைத்து விசாரிக்க முடிவு  செய்தனர்.

தனிப்படையை சேர்ந்த சரவணன் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்பு விசாரணைக்காக அந்த பாருக்கு சென்றுள்ளனர். திமுக வடக்கு மாவட்டப் பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான ஜி.மதியழகன்(55) என்பவர், அதே பகுதியில் தொடர்ந்து மது விற்பனை செய்யும் பரிமளா என்ற நபரை இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளார்.

இதை பார்த்த போலிசார்கள் இருவரும் தடுத்து விசாரிக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் காவலர்களை மதியழகன் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்குவதற்கும் முயற்சி செய்து இருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகாத வார்த்தைகளால் பேசியது, பணி செய்யவிடாமல் போலிசாரை தடுத்தது, தாக்க முயற்சி செய்தது, அவமதிக்கும் வகையில் ஈடுபட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வடகாடு போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து மதியழகன் மற்றும் பரிமளாவை தேடி வருகின்றனர்.

மதியழகன் தாக்கியதில் காயமடைந்த போலீசார்கள் இருவர் அந்த பகுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Executive Attacked TN Special Police


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->