திமுக முன்னாள் அமைச்சர் மகனை உடனே கைது பண்ணுங்க... உயர்நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் பி.எம். செங்குட்டுவனின் சொத்து குவிப்பு வழக்கில் அவரது மகன் உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்திருந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.வாக இருந்த செங்குட்டுவன், திமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.81.42 லட்சம் மதிப்பிலான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இதில், அவரது மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம் மற்றும் சகோதரியின் மகள் வள்ளி ஆகியோர் குற்றவாளிகளாக இடம் பெற்றனர்.

வழக்கை விசாரித்த திருச்சி நீதிமன்றம், செங்குட்டுவன் மற்றும் அவரது மருமகன் ராஜலிங்கம் இறந்துவிட்ட காரணத்தால் அவர்களை விடுவித்து, மற்ற நான்கு பேருக்கும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும் விதித்து கடந்த ஆண்டு அக்டோபரில் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், வாதங்களை துவங்க மனுதாரர்கள் தயங்கியதைக் கவனித்த நீதிபதி வேல்முருகன், தண்டனையை இடைநிறுத்தியிருந்த உத்தரவை ரத்து செய்து, அவர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Ex Minister Son Arrest Order court


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->