உதயநிதி ‘கம்ப்யூட்டர் மைண்ட்’ கொண்டவர் - புகழ்ந்து தள்ளிய துரைமுருகன்!
DMK duraimurugan udhaynithi
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதில், "எனது அரசியல் பயணத்திற்கு தொடக்கமாக இருந்த இடம் இந்த காட்பாடி தொகுதிதான். நம் கழக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மண்ணில் மீண்டும் இருப்பது பெருமையாக உள்ளது.
நான் துணை முதல்வராகப் பொறுப்பு ஏற்கும்போது, அவரிடம் வாழ்த்து பெற்றேன். சட்டமன்றத்தில் பின்புறம் இருந்த நான், இன்று அவரின் அருகில் அமர்ந்ததைப் பார்த்து, ‘இனிமேல்நீ என் பக்கத்து சீட்டு தானே… வா… உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என துரைமுருகன் அன்புடன் கூறினார்" என்றார்.
பின்னர், அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், "என் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் போது, முதன் முதலில் பிரச்சாரம் செய்ய உதயநிதி வந்திருந்தார்.
அந்த நிகழ்வை அவர் இன்று நினைவுபடுத்தினார். எனக்கே அது மறந்து போனது. ஆனால் அவருக்குள் கருணாநிதியை நினைவுபடுத்தும் ஞாபக சக்தி உள்ளது. உதயநிதி உண்மையிலேயே ‘கம்ப்யூட்டர் மைண்ட்’ கொண்டவர்" என புகழ்ந்து பேசினார்.
English Summary
DMK duraimurugan udhaynithi