வேங்கைவயல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை: அமைச்சர் ரகுபதியின் பதிலடி! - Seithipunal
Seithipunal


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில், த.வெ.க தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நூல் வெளியீட்டையும், சிறப்புரையையும் நிகழ்த்தினார்.

விழாவில், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து பேசும் போது, விஜய், “200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்” எனத் தெரிவித்தார்.

வேங்கைவயல் விவகாரத்தையும் அவர் தனது பேச்சில் கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையே, 2026 தேர்தல் தொடர்பான அவரது கருத்துக்கள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

த.வெ.க தலைவர் விஜயின் விமர்சனங்களுக்கு பதிலளித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பல கடுமையான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:“திமுக கூட்டணியில் தப்பு கணக்கு போடும் பழக்கம் இல்லை. பிளஸும் மைனஸும் எங்களிடம் சம்பந்தமில்லை. நாங்கள் மன்னர் ஆட்சி நடத்தவில்லை, ஜனநாயக ஆட்சி நடத்துகிறோம்.”

“உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை வாரிசு அடிப்படையில் வழங்கவில்லை. இது முற்றிலும் அசாத்தியமான விமர்சனம்.”

வேங்கைவயல் விவகாரம் குறித்து அவர் கூறினார்:“அந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற திமுக முயற்சி செய்யவில்லை. இந்த விவகாரம் தனிநபர் ஆணையத்தால் விசாரிக்கப்படுகிறது. எவராலும் அரசியல் ஆதாயம் தேட முடியாது.”அத்துடன், “சிமான் உடன் நேரடியாக மோத திமுகவுக்கு எந்தவிதமான பயமும் இல்லை” என தெரிவித்தார்.

விஜயின் கருத்துகள் மற்றும் ரகுபதியின் பதிலடி, தமிழக அரசியலில் வெவ்வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மேலும் மோதலாக மாறும் சூழல் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK does not need to save anyone in the Vengai field issue Minister Raghupathi response


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->