திமுக முக்கிய நிர்வாகியின் பதவி, திடீர் நீக்கம்! பணமும் போச்சு, பதவியும் போச்சு! அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


ஆரணி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான சிவானந்தம், திமுகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தார். இன்று அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக திமுக பொதுசெயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். 

கடந்த 2016- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக தலைமை சிவானந்தத்தின் மகனுக்கு  சீட் வழங்கியிருந்தது. இந்த தேர்தலில் செலவு செய்ய பணமில்லை என்பதால் கரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம், காசோலைகள், சொத்து பத்திரங்கள் போன்றவற்றை அடமானாக தந்து 5 கோடிக்கு மேல் கடன் வாங்கியிருந்தார் சிவானந்தம். அந்த தொகைக்கு சில மாதங்கள் வட்டி செலுத்தி வந்துள்ளார். அதன்பின் வட்டி வழங்கவில்லை என கூறப்படுகிறது.. இதனால் அந்த தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளனர். 

சிவனானந்தமோ  இதோ, அதோ என இழுத்தடித்துள்ளார். அசல் மற்றும் வட்டி என தொகை மொத்தமாக ரூபாய் 8 கோடியாக உயர, பணம் தந்த கரூரை சேர்ந்த முக்கிய பிரமுகர், திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பிப்ரவரி 6- ஆம் தேதி விடியற்காலை 01.30 மணியளவில் அவரது வீட்டுக்கு சென்ற காவல்துறையினர், அவரை அழைத்து வந்து திருவண்ணாமலையில் வைத்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தின் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக எம்எஸ் தரணி வேந்தனை நியமித்து திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுவரை பொறுப்பில் இருந்து வந்த முன்னாள் ஆரணி எம்எல்ஏ சிவானந்தம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தேர்தலில் நின்று பணத்தை பறிகொடுத்த நிலையில், தற்போது பதவியும் பறிபோய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK District Secretary Changed in Thiruvannamalai north district


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->