முதலமைச்சர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் வருகிற 13-ஆம் தேதி...!
DMK district secretaries meeting chaired by Chief Minister held on 13th
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் ''செயலாளர்கள் கூட்டம்'' குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டதாவது,"வருகிற 13-ந்தேதி புதன்கிழமை காலை 10.30 மணி அளவில், தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.

மேலும், ஓரணியில் தமிழ்நாடு- உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவிர்த்துவிடாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
English Summary
DMK district secretaries meeting chaired by Chief Minister held on 13th