திமுக வேட்பாளர் போட்டி தொடக்கம்! டிசம்பர் 15–23 வரை விருப்ப மனு பெறும்தேதி அறிவித்த எடப்பாடி...!
DMK candidate selection process begins Edappadi announced dates receiving applications from December 15 to 23
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் ஆர்வமுள்ள உறுப்பினர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யும் காலக்கட்டத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது,"அடுத்த கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு செயல்முறை தொடங்குகிறது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிற்பதற்கு விருப்பமுள்ள கழக உறுப்பினர்கள், 15.12.2025 (திங்கள்) முதல் 23.12.2025 (செவ்வாய்) வரை சென்னை தலைமைக் கழகத்தில் நேரடியாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை படிவங்கள் வழங்கப்படும்; எனினும் முதல் நாளான டிசம்பர் 15ஆம் தேதி மட்டும் நண்பகல் 12 மணிக்குப் பிறகே படிவங்கள் விநியோகிக்கப்படும்.
விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட அனைத்து விபரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து, இதே காலக்கட்டத்திற்குள் தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்குமாறு அவர் தெரிவித்தார்.
English Summary
DMK candidate selection process begins Edappadi announced dates receiving applications from December 15 to 23