விஜயின் 25 ஆண்டுகள் நெருங்கிய துணை பி.டி. செல்வக்குமார் திமுகவில் இணைந்து பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


தவெக தலைவர் விஜயுடன் நீண்ட 25 ஆண்டுகள் நெருக்கமாகச் செயல்பட்ட பி.டி. செல்வக்குமார், தற்போது திமுகவில் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார்.

2003ஆம் ஆண்டிலிருந்து விஜயின் மக்கள் தொடர்பு அலுவலராக முக்கிய பொறுப்பில் இருந்த அவர், பின்னர் கலப்பை மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனி தலைமை வகித்து வந்தார்.

இந்நிலையில், பி.டி. செல்வக்குமாரின் தலைமையில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து திமுகவில் இன்று இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், விஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும் பி.டி. செல்வக்குமார் என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijays close associate 25 years PT Selvakumar joins DMK causing stir


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->