திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைகிறது.? இடப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்.! வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்பி ஜோதிமணி.!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் கூட்டணிக் கட்சியினருடன் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை திமுகவினர் வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு செய்வது குறித்து இறுதி கட்ட ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. 

கூட்டணிக் கட்சியினருடன் வேட்பாளர் இறுதி செய்தல், வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டணி கட்சியை சார்ந்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜோதிமணியிடம் கருத்து கேட்காமல், அவரை அலட்சியப் படுத்தும் வகையில் வார்டு பங்கீடு இறுதி செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமணி, திமுகவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். 

இதையடுத்து, அவர் திமுக அலுவலகத்தில் இருந்து ஆவேசத்துடன் வெளியேறி, பேச்சுவார்த்தையின் போது திமுகவினர் தங்களை வெளியேற்றியதாக  குற்றம் சாட்டினார். பேச்சுவார்த்தைக்கு வந்த கூட்டணிக் கட்சியினரை வெளியே போக சொல்ல நீங்கள் யார்.? கூட்டணி தர்மம் இதுதானா.? நான் ஒன்று உங்கள் வீட்டிற்கு நான் விருந்துக்கு வரவில்லை. ஒருமையில் எனக்கு திரும்ப பேச தெரியும் என ஜோதிமணி ஆவேசத்துடன் கூறிவிட்டு, அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk and congress alliance issue


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->