திமுக கூட்டணி சுக்கு நூறாகும்! அமித்ஷாவின் வேதவாக்கை ஏற்று எங்கள் கூட்டணி வெற்றி பெறும்! - எல். முருகன்
DMK alliance will be successful Our alliance will win by accepting Amit Shahs promise L Murugan
சென்னையில் இன்று மத்திய மந்திரி எல்.முருகன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் தெரிவித்ததாவது,"பிரதமர் நரேந்திரமோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மற்றும் ஆட்சி பொறுப்பு குறித்து அமித்ஷா என்ன சொல்கிறாரோ அது தான் முடிவு.

அவர் எங்கள் தேசிய தலைவர். அவர் சொல்வதுதான் வேதவாக்கு.தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேறும் சூழலில் இருக்கிறது. தி.மு.க. கூட்டணி சுக்கு நூறாக உடைய போகிறது.எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. தமிழக அரசிடம் நிதி இல்லாததால் தான் அறநிலையத்துறை நிதியை எடுத்து செலவு செய்கிறார்கள்.
கோவிலை விட்டு அரசாங்கம் வெளியேற வேண்டும்.சமூக நீதி விடுதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. அங்கு எந்த வசதியும் இல்லை. விடுதியை முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த அரசு எல்லா துறையிலும் தோல்வி அடைந்து விட்டது.அம்பேத்கர் வழியில் நடப்பதை பற்றி சொல்வதற்கு முதலமைச்சருக்கு அருகதை கிடையாது.
இந்த அரசுக்கு தமிழக மக்கள் மீது எந்த நலனும் இல்லை. 4 ஆண்டுகளாக எந்த திட்டமும் செய்யவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் செய்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
DMK alliance will be successful Our alliance will win by accepting Amit Shahs promise L Murugan