திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்டு.? வெளியான பட்டியல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதையடுத்து, திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மார்ச் 2-ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற உள்ளது. இதில் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்க உள்ளனர். 

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், திமுக கூட்டணியின் உத்தேச தொகுதி பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புள்ளது. 

திமுக சின்னத்தில் போட்டியிடும் கட்சிகள் மதிமுகவுக்கு 7 தொகுதிகளும், விசிகவிற்கு 7 தொகுதிகளும், இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மமக கட்சிக்கு 2, மஜகவுக்கு 02, எஸ்டிபிஐ கட்சிக்கு 2, கொமதேக கட்சிக்கு 2, தவாக 1, இதர கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk alliance party seat


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->