தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை: எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் இன்று மாலை தி.மு.க தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளது. 

இந்த பேச்சு வார்த்தை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். இதில் தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் அமைச்சர்கள், துணை பொது செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். 

மேலும் 3 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, 4 மணி அளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, 5 மணி அளவில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி என நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இன்று நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட அதே தொகுதிகள் ஒதுக்கப்படுமா அல்லது வேறு தொகுதிகள் மாற்றி கொடுக்கப்படுமா என தெரியவரும். இதற்கான தொகுதி விருப்ப பட்டியலை மூன்று கட்சிகளும் தி.மு.கவிடம் இன்று வழங்க உள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK alliance parties talks seat sharing 


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->