சென்னையில் பரபரப்பு.! முதல்வர் வருகை., துடிதுடித்து உயிரிழந்த தேமுதிக பிரமுகர்.! - Seithipunal
Seithipunal


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் உத்தண்டி பகுதிக்கு முதல்வர் பழனிசாமி வருவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாவலூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் ராஜாமணி என்பவர் அதிமுகவின் கொடி கம்பங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்த கான்டராக்ட் வேலைக்காக தேமுதிகவை சேர்ந்த தியாகராஜன் என்ற 33 வயது நபரை என்பவரை ராஜாமணி நியமித்து இருக்கின்றார். தேமுதிக தியாகராஜனும் உத்தண்டியில் அதிமுக கொடிக்கம்பம் நடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அப்பொழுது எவரும் எதிர்பாராத நிலையில் அவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் தியாகராஜன் படுகாயம் அடைந்தார். அத்துடன் சிறிது நேரத்தில் தியாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

அதன் பின், அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk thiyaharaj dead in chennai


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal