தேமுதிகவில் இருந்து விலகிய பிரபல நடிகர்.. மீண்டும் எடுத்த முடிவு.!  - Seithipunal
Seithipunal


அன்பிற்கினியாள் படத்திற்கு பின்னர் நடிகர் அருண்பாண்டியன் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

பிரபல நடிகராக இருந்த அருண்பாண்டியன் கேப்டன் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தில் இணைந்து கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 

இருப்பினும் ஆட்சி முடிவதற்குள் அவர் தேமுதிகவில் இருந்து விலகி விட்டார். பின்னர் அரசியலில் பெரிய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் இருந்து வந்தார். சினிமாவிலாவது நடித்தாரா என்றால் அதுவுமில்லை. 

தற்போது அவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் நடித்து இருக்கும் அன்பிற்கினியாள் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து, மேலும், ஒரு சில படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

இயக்குனர் சாம் ஆண்டன்-அதர்வா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் அருண்பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk arun pandiyan in movie again


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->