நடுக்கடலில் அமெரிக்கா நடத்திய கொடூர தாக்குதல்...! மாயமான 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல் - ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடல்சார் போக்குவரத்தும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. பரஸ்பர தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த சூழலில், ஓமன் நாட்டை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் மார்ஷல் தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேதிப்பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற அந்த கப்பலில் 24 இந்திய மாலுமிகள் பணியில் இருந்தனர்.

கடல் வழிப் பயணத்தின் போது தாக்குதலுக்குள்ளான கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதுடன், கப்பலின் பல பகுதிகள் கடுமையாக சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகின.தாக்குதலுக்குப் பிறகு அவசர உதவி கோரி கப்பலில் இருந்த மாலுமிகள் அபாயச் சிக்னல் அனுப்பினர்.

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஓமன் கடற்படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.இந்த நடவடிக்கையில் 21 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் கப்பல் விபத்தின் போது கடலில் அடித்துச் செல்லப்பட்ட 3 இந்திய மாலுமிகள் குறித்து உடனடி தகவல் கிடைக்காததால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா தனது கவலையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியது. மேலும் சம்பவம் குறித்து பல்வேறு தரப்புகளுடன் மத்திய அரசு தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், கடலில் மாயமான 3 இந்திய மாலுமிகளும் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த தகவல் இந்திய கடல்சார் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் ஓமனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷினாஸ் துறைமுகம் அருகே நடைபெற்ற கப்பல் தாக்குதல் சம்பவம் குறித்து முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

brutal attack carried out by US middle ocean Official announcement that 3 missing Indian sailors dead


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->