மக்களே! உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது...!
distribution of applications Stalin project with you has started today
வருகிற 15-ந்தேதி, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று அதாவது திங்கட்கிழமை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படவுள்ளது. மேலும், சென்னையில் 6 வார்டுகளில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி:
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்ததாவது,"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'உங்களுடன் ஸ்டாலின்' எனும் திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் வருகிற 15-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டம், வருகிற 15-ந்தேதி முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் வருகிற 15-ந்தேதி, மாதவரம் மண்டலத்தில் வார்டு - 25, தண்டையார்பேட்டை மண்டலத்தில் வார்டு - 38, திரு.வி.க நகர் மண்டலத்தில் வார்டு - 76, தேனாம்பேட்டை மண்டலத்தில் வார்டு - 109, வளசரவாக்கம் மண்டலத்தில் வார்டு - 143 அடையாறு மண்டலத்தில் வார்டு - 168 ஆகிய 6 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் தொடங்கி நடைபெறவுள்ளது" என்று தெரிவித்துள்ளன.
English Summary
distribution of applications Stalin project with you has started today