அதிமுகவுக்கு பேரிடி...! - எம்.எல்.ஏ. பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா...! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உள்கட்சிப் பிளவு தொடர்ந்து தீவிர அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி. சண்முகம் அணி என இரு பிரிவுகளாக எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டு வரும் நிலையில், சண்முகம் ஆதரவு தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இந்த ஆதரவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கட்சிக்குள் கருத்து வேறுபாடும் வெளிப்படையாக வெடித்துள்ளது.இதற்கிடையில், சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை வழங்கியதுடன், பின்னர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்த சம்பவம் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.இந்த சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்ற அவர், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், முதலில் அளிக்கப்பட்ட ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், கைப்பட எழுதிய கடிதத்தை வழங்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இசக்கி சுப்பையா தனது கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி மீண்டும் சபாநாயகரிடம் வழங்கினார். பின்னர் அந்த கடிதத்தை சபாநாயகர் பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம், பதவியை ராஜினாமா செய்துள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது 4 ஆக உயர்ந்துள்ளது.மேலும், ராஜினாமா செய்த இசக்கி சுப்பையாவும் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Disaster for AIADMK MLA Isakki Subbaiah abruptly resigned from his post


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->