நடுத்தர மக்களுக்கு ஏமாற்றமா? நாட்டின் முன்னேற்றமா? - 2026 பட்ஜெட்டின் 'மாஸ்டர் பிளான்' குறித்து பொருளாதார நிபுணர் விளக்கம்
disappointment middle class step towards nation progress economist explains master plan 2026 budget
மத்திய பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகைகள் ஏதும் இடம்பெறாதது குறித்து பொருளாதார மேதை ராமசேசன் முன்வைக்கும் நுட்பமான பார்வைகள்.
பொதுவாக, நடுத்தர வர்க்கத்தினர் ஒவ்வொரு நிதியாண்டிலும் வருமான வரித் தளர்வுகளைப் பெரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது இயல்பே. இருப்பினும், நடப்பு பட்ஜெட்டில் அத்தகைய அறிவிப்புகள் ஏதுமில்லை.

தற்போதைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில், இந்தியாவின் நிதி நிலையைச் சமநிலைப்படுத்தி, பொருளாதாரத் தன்மையை நிலைநிறுத்துவதே (Economic Stability) அரசின் முதன்மை நோக்கமாகத் தெரிகிறது.இதற்குப் பின்னால் சர்வதேச அரசியலும் அடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத கூடுதல் வரி விதிப்பு, இந்தியாவின் வர்த்தகச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது நாடு அதிக அளவிலான இறக்குமதியையும், போதிய அளவற்ற ஏற்றுமதியையும் கொண்டுள்ள நிலையில், நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க நிலையான கொள்கைகளை மட்டுமே முன்னெடுக்க முடியும்.
கடந்த ஆண்டே வருமான வரியில் கணிசமான சலுகைகள் வழங்கப்பட்டுவிட்டதால், நடப்பாண்டில் மீண்டும் சலுகைகளை நீட்டிப்பதில் அரசுக்கு நிதி நெருக்கடிகள் இருக்கலாம்.இருப்பினும், இந்த பட்ஜெட் நாட்டின் நீண்டகால வளர்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக, சீனத் தயாரிப்பு 'செமி கண்டக்டர்கள்' மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை குறைந்து வருவதை இந்தியா தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளது. இதற்காக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமி கண்டக்டர் உற்பத்தித் துறைக்கு ரூ.40,000 கோடி பிரம்மாண்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இது இந்தியத் தொழில்துறையில் ஒரு 'புரட்சிகர மாற்றத்தை' (Industrial Transformation) விதைக்கும்.அதேபோல், ஏற்றுமதிச் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில், கண்டெய்னர் உற்பத்திக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த உற்பத்தித் துறைக்கும் (Manufacturing Sector) வலு சேர்க்கும் வகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் இதில் அடங்கியுள்ளன. நிதியாதாரத்தைப் பெருக்கி, தொழில் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்த பட்ஜெட்டை ஒரு தொலைநோக்குத் திட்டமாக வரவேற்கலாம்," என அவர் விரிவாகத் தெரிவித்துள்ளார்.
English Summary
disappointment middle class step towards nation progress economist explains master plan 2026 budget