'கட்சியில் தொடர விருப்பமில்லை; கனத்த இதயத்துடன் விடை பெறுகிறேன்'; அதிமுகவிலிருந்து விலகியுள்ள இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..! - Seithipunal
Seithipunal


திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆர்.வி.உதயகுமார் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விலகல் கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த விலகல் கடிதத்தில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் குறிப்பிட்டுள்ளதாவது;

''நான் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியின் உறுப்பினராகவும், தற்போது மாநில கலைப்பிரிவு செயலாளராகவும் இருக்கிறேன். கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஆழ்ந்த கவலையும், வேதனையும் அடைந்துள்ளேன்.

தற்போது உள்ள மன நிலையில், கட்சியில் தொடர விருப்பம் இல்லாததால், எனது கலைப்பிரிவு செயலாளர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்தும் விலகுகிறேன். 

தற்போது வரை எனது பணியில் துணை நின்ற தங்களுக்கும், முன்னாள் அமைச்சர் பெருமக்களுக்கும், மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும், நகர, பேரூராட்சி, வட்ட, பகுதி நிர்வாகிகளுக்கும் எனது நன்றியினை கனத்த இதயத்துடன் தெரிவித்து விடை பெறுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director RV Udhayakumar quits AIADMK


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->