'வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை'; தங்கம் தென்னரசு தாக்கு..!
Thangam Thennarasu presents the White Paper on Tamil Nadu fiscal management
தமிழகத்தின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்டுள்ளார். இதில் அரசின் வரவு செலவு கணக்குகள், நிதி நிலை, கடந்த அரசின் செயல்பாடுகள் குறித்து இந்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது;
இந்நிலையில் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
''வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல! எனினும், உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Thangam Thennarasu presents the White Paper on Tamil Nadu fiscal management