FIFA உலகக்கோப்பைத் 2026; பிரேசில் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி; லீக் போட்டிகளில் இருந்து நெய்மர் விலகல்..? - Seithipunal
Seithipunal


FIFA உலகக்கோப்பைத் தொடர் 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் லீக் போட்டிகள் முழுவதையும் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் தவறவிட அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் சாண்டோஸ் அணிக்காக விளையாடிய போது அவருக்கு ஏற்பட்ட தசைநார் காயம் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மொராக்கோவுக்கு எதிரான முதல் போட்டியைத் தொடர்ந்து, ஜூன் 19-இல் ஹைட்டி மற்றும் ஜூன் 24-இல் ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. 

அவசரப்பட்டு களம் இறங்கினால் காயம் தீவிரமடையும் என்பதால், பிரேசில் நாக்- அவுட் சுற்றுக்குத் தகுதிபெறும் போது அவரை முழு உடற்தகுதியுடன் களமிறக்க பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி மற்றும் மருத்துவக் குழு திட்டமிட்டுள்ளது. இது பிரேசில் ரசிகர்களை     சோகமடைய வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Brazils Neymar withdraws from the FIFA World Cup tournament matches


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->