ஸ்பெயினை அதிர்ச்சியடைய 40 வயது கோல்கீப்பர் வோசின்ஹா; தன் அம்மாவால் வர முடியவில்லை என கண்ணீர் பேட்டி..! - Seithipunal
Seithipunal


ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடர் சூடுப் பிடிக்கத் தொடங்கியுள்ளது; இந்த தொடரில் பலரும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெயின் மற்றும் கேப் வெர்டே அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்று ஆட்டம் கோலின்றி சமனில் முடிந்தது. 

சாம்பியன் அணியான ஸ்பெயினின் கோல் முயற்சியை 7 தடவைகள் வரை தடுத்து நிறுத்திய 40 வயது வீரரான கேப் வெர்டே அணியின் கோல்கீப்பர் வோசின்ஹாவின் ஆட்டத்தை பார்த்து உலகமே வியந்துள்ளது. குறிப்பாக ஆடுகளத்தில் ஸ்பெயின் வீரர்கள் ஸ்தம்பித்து போனார்கள்.

ஸ்பெயின் அணிக்கு களத்தில் கடும் சவால் கொடுத்த வோசின்ஹா, ஆட்டத்துக்கு பிறகு கண்கலங்கியை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, 'நான் எனது தாத்தா, பாட்டி உடன் தான் வளர்ந்தேன். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். அவர்கள் எனக்காவும், என் வாழ்க்கைக்காகவும் நிறைய செய்துள்ளார்கள்' அதனால் நான் அழுதேன் என்று குறிப்பிட்டார்.

அதாவது, விசா பிரச்சினை காரணமாக தனது அம்மாவால் இங்கு வர முடியவில்லை என்றும், அவரது விசாவுக்கான கட்டணத்தை எங்களால் உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் போனது என்று கூறியதோடு, அவர் இங்கு இருக்க வேண்டுமென நான் விரும்பினேன். கேப் வெர்டே மக்களை எண்ணி மகிழ்ச்சி கொள்வதாகவும் வோசின்ஹா தெரிவித்தார்.

முக்கியமாக ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராம் தளத்தில் வோசின்ஹாவை சுமார் ஐம்பது ஆயிரம் பேர் மட்டுமே பின் தொடர்ந்தனர். இந்த ஆட்டத்தில் அவரது அபார செயல்பாட்டை கண்ட கால்பந்து ரசிகர்கள் இன்ஸ்டாவில் அவரை அதிகளவில் தொடர்ந்தனர். இப்போது அவர் சுமார் 8.4 மில்லியன் பேர் இன்ஸ்டா தளத்தில் மட்டும் பின்தொடர்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

40 year old goal keeper Vozinha in tearful interview as his mother couldnt make it


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->