'டெலிகிராம்' செயலிக்கு இந்தியாவில் தற்காலிக தடை; 15 கோடிக்கும் அதிகமான சாதாரண டெலிகிராம் பயனர்களை தண்டிப்பதா..? பாவெல் துரோவ் கேள்வி..? - Seithipunal
Seithipunal


நீட் தேர்வுத்தாள் வெளியாகி சர்ச்சையான நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஜூன் 21 அன்று நடைபெறவுள்ளது. நீட் மறுதேர்வு இந்தியாவில் நீட் மறுதேர்வு எழுதவிருக்கும் மாணவர்களை ஏமாற்றும் நோக்கில், டெலிகிராம் செயலியில் போலி வினாத்தாள்கள் பரப்பப்படுவதாகக் கூறி மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  அந்த செயலிக்கு ஒரு வாரம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. 

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு டெலிகிராம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

''கசிந்த வினாத்தாள்களை சில பயனர்கள் பகிர்ந்துக் கொண்டனர் என்பதற்காக, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டெலிகிராம் செயலியை ஒரு வாரத்திற்குத் தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கை வினாத்தாள்களை கசியவிட்ட உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கவில்லை. 

மாறாக, இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான சாதாரண டெலிகிராம் பயனர்களையே தண்டித்துள்ளது. இந்தத் தடையால் எதுவும் நின்றுவிடப் போவதில்லை. வினாத்தாள் கசிவுகள் இப்போது பிற செயலிகளுக்கு இடம் பெயர்ந்துவிட்டன" என்று தெரிவித்துள்ளார். 

வரும் ஜூன் 21 அன்று நீட் மறுதேர்வை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, 'PAPER LEAKED NEET', 'Re-NEET 2026' போன்ற பெயர்களில் இயங்கி வந்த போலி நெட்வொர்க்குகளை கண்காணித்த தேசிய தேர்வு முகமையின் பரிந்துரையின் பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A-இன் கீழ் இந்தத் தடை ஜூன் 22 வரை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தேர்வுக்குப் பிறகு பழைய செய்திகளை எடிட் செய்து வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது போன்ற போலி ஆதாரங்களை உருவாக்குவதைத் தடுக்க, ஜூன் 30 வரை டெலிகிராமின் மெசேஜ் எடிட்டிங் வசதியையும் முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் குறித்த உத்தரவைத் தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டெலிகிராம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pavel Durov questions the Central Government on whether it intends to penalize over 150 million ordinary Telegram users


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->