மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027; முதல் கட்டம் நிறைவடைந்துள்ள மாநிலங்கள்..!
States where the first phase of the 2027 census has been completed
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டத்தின் கீழ், வீடுகள் குறித்த கணக்கெடுப்புக்கான களப் பணிகள் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இன்று தொடங்கியது.
இதற்காக கணக்கெடுப்பாளர்கள் 2026 ஜூலை 15 வரை அனைத்து வீடுகளுக்கும் செல்லவுள்ளனர். இதனை தொடர்ந்து கேரளா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கியுள்ள சுய கணக்கெடுப்பு வசதி 2026 ஜூன் 30 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த மாநிலங்களில் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு 2026 ஜூலை 01 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. மாநிலங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அதிகாரப்பூர்வ சுயகணக்கெடுப்புப் பக்கமான se.census.gov.in என்ற பக்கம் மூலம் சுயகணக்கெடுப்பை நிறைவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது வீடு தோறும் சென்று கணக்கெடுக்கும் பணிகள் தற்போது குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், லடாக், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றன. இப்பகுதிகளில் சுய கணக்கெடுப்பை நிறைவு செய்த குடியிருப்பாளர்கள் அதற்கான அடையாள ஆதாரத்தை வீட்டிற்கு வருகை தரும் கணக்கெடுப்பாளர்கள் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அத்துடன், மகாராஷ்டிரா, மேகாலயா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் தில்லியில் 2026 மே 16 முதல் ஜூன் 14 வரை நடைபெற்ற வீட்டுக் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
English Summary
States where the first phase of the 2027 census has been completed