மன்னிப்புக் கோரினார் இயக்குநர் பாக்யராஜ்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில், "பிரதமர் மோடி எங்கு வெளிநாடு பயணம் சென்றாலும் ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஓய்வெடுக்காமல், உடல் ஆரோக்கியம் மிகுந்த பிரதமர் தான் இந்தியாவுக்கு அவசியம். 

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது சரியான ஒன்று. சரியான நபரை தேர்ந்தெடுத்துள்ளனர். இப்படி பேசினால் அவர்களுக்கு பிடிக்காது, அப்படி பேசினால் இவர்களுக்கு பிடிக்காது. எப்படி பேசினாலும் ஏதேனும் ஒரு விமர்சனம் வந்து கொண்டுதான் இருக்கும்.

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்பவர்கள் குறைமாத பிரசவத்தில் பிறந்தவர்கள் தான் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் மூன்று மாத குறைபிரசவத்தில் பிறந்தவர்களுக்கு தான் வாய், காது இருக்காது. பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது" என்று அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பாக்யராஜ் பேசினார்.

இதற்க்கு கடும் கண்டனங்கள் எழவே, தற்போது இயக்குனர் பாக்யராஜ் தனது பேச்சு குறித்து விளக்கமளித்து மன்னிப்பு கோரியுள்ளார். 

அதில், "குறை பிரசவம் என்று நான் சொன்ன வார்த்தை தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. இதனால் யார் மனத்தவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் பாஜகவில்இல்லை. எனது மனதில் திராவிடத் தலைவர்களின் சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கிறது. 

பெரியார், அண்ணா, கலைஞர், ஜீவா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் நினைவுகளை மனதில் ஏந்தி உள்ளேன். அந்த வகையில் தான் நான் எனது கருத்தை பதிவிட்டேன் என்று இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director bhagyaraj apology


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->