தேனி, திண்டுக்கல் பகுதியில் இபிஎஸ் பிரசாரம்! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்க கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

அதன்படி தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். 

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். இதனை அடுத்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல்லில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொள்வர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindugal Edappadi Palaniswami campaign


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->