புத்தாண்டு அன்று இதற்கு அனுமதி.. மகிழ்ச்சியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுதும் மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் தொற்றை தடுக்கவும், தமிழக அரசியல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. மேலும், பண்டிகை காலங்களில் தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவது முற்றிலும் தவிர்க்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. 

நாளை இரவு தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகள் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. ஆனால் அனைவரும் வீடுகளில் அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வழிபாட்டு தளங்களில் தமிழக அரசினால் அறிவுறுத்தப்பட்ட கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றும் பின்பற்றுமாறும், புத்தாண்டு தினத்தில் பொது இடங்களில் சாலை ஓரங்களில் கூட்டம் கூடுவதையும், இருசக்கர வாகனங்களில் சுற்றுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

இந்நிலையில், புத்தாண்டு ஆண்டு கோவில்களில் பக்தர்கள் வழிபட தடை இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவில்களில் பக்தர்கள் வழிபடலாம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devotees are allowed to worship in temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->