சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராக பதவி ஏற்கும் நாள்? வெளியான தகவல்!
Deputy President CP Radhakrishnan
துணை குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று பா.ஜ.க. தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து நன்றியை தெரிவித்தார். அவருக்கு தொடர்ந்து வாழ்த்து செய்திகள் குவிந்து வருகின்றன.
ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவின் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் அழைப்பிதழ்கள் வெளியிடப்படும்.
பதவி ஏற்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ராதாகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணமும் அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். அதனைத் தொடர்ந்து அவர் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கான அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.
தற்போது ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிராவின் கவர்னராக பணியாற்றி வருகிறார். துணை ஜனாதிபதி பொறுப்பேற்கும் முன் அவர் அந்தப் பதவியில் இருந்து ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க உள்ளார்.
English Summary
Deputy President CP Radhakrishnan