சிக்கலில் சிக்கிய டிவிட்டர் நிறுவனம்., டெல்லி உயர்நீதிமன்றம் பகிரங்க எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


இந்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், பாதகமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, டிவிட்டர் நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்று நடக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் கடந்த மே மாதம் 26-ம் தேதியுடன் முடிந்தது. கடைசி நேரத்தில்  ஃபேஸ்புக், கூகுள் உட்பட அனைத்து நிறுவனங்களும் புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்பதாக அறிவித்தன. 

ஆனால், ஆரம்பம் முதலே ட்விட்டர் நிறுவனம் இந்த புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்க மறுத்து ஆடம் பிடித்தது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வழக்கில் இன்று டிவிட்டர் நிறுவனத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதி ரேகா பிள்ளை, "குறைதீர்க்கும் அதிகாரி அந்த பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து 15 நாட்கள் ஆன பின்னரும், புதிய அதிகாரியை நியமிக்காதது ஏன்?

வேண்டுமென்றே குறைதீர்க்கும் அதிகாரியை நியமிக்காமல் டிவிட்டர் நிறுவனம் பிடிவாதம் செய்து வருகிறது" என்று தெரிவித்தார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர்,  இந்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு முடிந்து 40 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், டிவிட்டர் நிறுவனம் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது" என்று தெரிவித்தார்.

அரசு வழக்கறிங்கரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரேகா, "டிவிட்டர் நிறுவனம் இனிமேலும் மழுப்பாமல் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் பாதகமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று, டிவிட்டர் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi highcort warn to twitter


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal