காரில் தனியாக சென்றாலும் இனி இது கட்டாயம்.! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா நோய் தொற்று பரவல், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

தலைநகர் டெல்லியில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று டெல்லி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கண்டிப்புடன் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் காரில் தனியாக சென்ற சில நபர்களுக்கு முக கவசம் அணியாததால், டெல்லி போலீசாரால் அபராதம் விதித்து வந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட நான்கு பேர், இந்த நடைமுறைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம்,

"காரை தனியாக ஓட்டிக் சென்றாலும் முக கவசம் அணிவது கட்டாயம். முக கவசம் அணிவது கொரோனாவை கண்டிப்பாக தடுக்கும். பொது இடம் மட்டும் அல்ல. காரில் ஒருவர் தனியாக இருந்தாலும் கூட அவர் மாஸ்க் அணிய வேண்டும்" என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi HC order for face mask


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal