திமுகவில் ஓரங்கட்டப்பட்ட எம்.ஆர்.கே.பன்னீர்., உள்ளதும் போன பரிதாபம்! முக ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு! - Seithipunal
Seithipunal


வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் நிர்வாக வசதிக்காக பல மாற்றங்களையும் கட்சியில் செய்து வருகிறார்.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்ட திமுக செயலாளர்களை நிர்வாக வசதிக்காக 3 ஆக உயர்த்த திமுக தலைமை ஆலோசனை செய்து வருகிறது. 9 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது கடலூர் மாவட்டம்.

இதில், 5 தொகுதிகள் அதிமுக வசம் உள்ளது. 4 தொகுதிகள் திமுக வசம் உள்ளது. இந்த 9 தொகுதிகளுக்கும் அதிமுகவில் ஒரு மாவட்ட செயலாளருக்கு தலா 3 தொகுதிகள் வீதம் 3 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதனை பின்பற்றி திமுகவிலும் 3 மாவட்ட செயலாளர் மாற்றியமைக்க, திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், கடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 5 தொகுதிகள் அடங்கிய கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் இருந்து இரண்டு தொகுதிகள் பறிக்கப்பட்டு கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய தொகுதிகள் அடங்கிய கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cuddalore dmk split 3


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->