திமுக கூட்டணியில் திடீர் விரிசல்.. தனித்து போட்டியிடும் கூட்டணி கட்சி! அதிர்ச்சியில் திமுகவினர்!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர் கூட்டணி தர்மத்தை மதிக்காததால் திமுக கூட்டணி கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தேர்தலை சந்தித்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் ஐக்கிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறது. 

இந்நிலையில் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய சிபிஎம் கட்சி தஞ்சாவூரில் மட்டும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், திமுக தான். அதாவது, தஞ்சாவூர் திமுக மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் கூட்டணி தர்மத்தை மதிக்காமல் போதுமான சீட்டைக் ஒதுக்க மறுப்பதே தனித்து போட்டியிட காரணம் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cpm election nomination


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal