தமிழகத்தில் நடந்த மிகக் கொடிய துயரச் சம்பவம்! இரங்கல் தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை.

சுவர் இடிந்து 17 பேர் உயிரை பறித்த கொடிய துயரம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகரம், நடுர் பகுதியில், தலித் கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றார்கள்.

இன்று 02.12.2019 அதிகாலை தனியார் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள், 9 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து இருப்பது மிகக் கொடிய துயரச் சம்பவம் ஆகும்.

முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்து இருக்குமேயானால், இத்தகைய துயரச் சம்பவம் நிகழ்ந்து இருக்க முடியாது.
வீட்டு உரிமையாளரும், அதிகாரிகளும் அலட்சியம் காட்டியதால் ஏற்பட்ட விபரீத விபத்தாகும்.

விபத்திற்கு காரணமானவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.
உயிர் இழந்த 17 பேர் குடும்பத்திற்கும் உரிய நிவாரணத்தை அரசு உடனே வழங்கிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்வதுடன் உயிர் இழந்த 17 பேர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cpim statement for mettupalayam wall fall down


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal