மக்கள் மனதை கவரும் போட்டி! இலவச அறிவிப்புகளில் திமுக-அதிமுக மோதல் தீவிரம்...! - திமுக எல்.இ.டி. டிவி வழங்க திட்டம்..?!
contest that captivates hearts people DMK AIADMK clash intensifies free advertisements DMK LED TV offering
வரவிருப்பது 17-வது தேர்தலாகும்.ஆரம்ப காலங்களில் ஆட்சியில் இருந்த அரசுகள், தாங்கள் செயல்படுத்திய வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து மக்களின் ஆதரவை நாடின. அதேசமயம், எதிர்க்கட்சிகள் “ஆட்சிக்கு வந்தால் மாற்றம் கொண்டுவந்து விடுவோம்” என்ற வாக்குறுதிகளுடன் வாக்குகளை கோரின.
ஆனால் காலப்போக்கில் தேர்தல் அரசியல் முற்றிலும் மாறியது.சாதனைகளை முன்வைப்பதிலிருந்து, கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகளுக்கு அரசியல் கட்சிகள் மாறின. இதன் தொடக்கமாக 2006-ம் ஆண்டு தி.மு.க. இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவோம் என்ற அறிவிப்பை வெளியிட்டு வெற்றியைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற இலவசங்களை அறிவித்து ஆட்சியை கைப்பற்றியது.இவ்வாறு இலவச அரசியல் வேரூன்றிய பிறகு, மாநிலத்தின் பொருளாதாரத்தில் கடன் சுமை அதிகரித்தது என்ற விமர்சனமும் எழுந்தது.
இருப்பினும், அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதி முறையை மாற்றி, பொருட்கள் வழங்குவதைத் தாண்டி நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தின.2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு முக்கிய காரணமாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அமைந்தது.
இந்நிலையில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இலவச பொருட்களும், பண உதவிகளும் இணைந்த வாக்குறுதிகளை அறிவித்து, வீடு தோறும் ஃப்ரிட்ஜ் வழங்குவோம் என புதிய வாக்குறுதியை வெளியிட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியான தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 2-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது.
அதில் திருச்சியை புதிய தலைநகரமாக அறிவிக்கும் வாய்ப்பும், வீடு தோறும் எல்.இ.டி. டிவி வழங்கும் திட்டமும் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், தேர்தல் களத்தை சூடுபிடிக்கச் செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 3-ந் தேதி திருவாரூரில் இருந்து தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கவுள்ளார். தமிழக அரசியல் மீண்டும் ‘இலவசங்கள் vs வளர்ச்சி’ என்ற புதிய விவாதத்தை நோக்கி நகர்கிறது.
English Summary
contest that captivates hearts people DMK AIADMK clash intensifies free advertisements DMK LED TV offering