ஐடி ரெய்டு விவகாரம்: ஆதாரம் வெளியிட்ட செல்வப்பெருந்தகை - Seithipunal
Seithipunal


வருமான வரித்துறை சோதனை நடந்தது தொடர்பாக வீடியோ ஆதாரம் வெளியிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார்.

வருமான வரித்துறை சோதனை நடத்தவில்லை என்று அதிகாரிகள் மறுத்திருந்த நிலையில், அதற்கு எதிராக ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:

திமுக நிர்வாகி படப்பை மனோகரன் வீட்டில் உள்ள தனது அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்ததாக தெரிவித்துள்ளார்.

சோதனை என்ற பெயரில் துன்புறுத்தல் நடந்ததாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் கூறினார்.

வருமான வரித்துறை சோதனை நடத்துவது தவறில்லை, ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த சோதனையால் தான் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், தனது ஆதரவாளர்களான பல நிர்வாகிகளின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக குற்றம் சாட்டினார்.

சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறையினர் அட்டூழியம் செய்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

congress selvaperunthagai IT Raid


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->