ஒரே முகவரியில் 45 பேர்.. வாக்குகளை திருடும் பாஜக... குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மத்திய அரசுடன் இணையப்பட்டு, தேர்தலில் வாக்கு மோசடியில் ஈடுபட்டதோடு, நாட்டின் நலனுக்கு எதிரான செயல்களில் சேர்ந்து செயல்பட்டதாக கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல், வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளைக் எடுத்துரைத்தார். 2024 தேர்தலில் பாஜக வெல்ல வெறும் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதுமானது. அந்த தொகுதிகளில் மட்டும் 33,000 வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றது முக்கியமானது என்று கூறியுள்ளார்.

மேலும், ராகுல் காந்தி வெளியிட்ட குற்றச்சாட்டு பட்டியல்..

* 80 வயது நபர் ஒருவர் ‘முதல் முறை வாக்காளர்’ என பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்
* ஒரே முகவரியில் 45 பேர் பெயர்கள்
* தொழிற்சாலைகளில் வாக்காளர்கள் பதிவு
* புகைப்படம் இல்லாத வாக்காளர்கள்
* ஒரே தொகுதியில் 12,000 பேர் சேர்க்கப்பட்டிருப்பது
* ஒரு வாக்காளரின் பெயர் பல இடங்களில் இடம்பெற்றிருப்பது
* முகவரிகளில் 40,000 பேர் இல்லாதது
* பலருக்குத் தந்தை/தாய் பெயர்கள் கூட இல்லாதது

கர்நாடகத்தில் மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 1 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளதாக காங்கிரஸ் கண்டுபிடித்துள்ளது. 6.5 லட்சம் வாக்குகளில் ஒரு லட்சம் போலியாக இருந்தது என்றும் தெரிவிக்கிறார்.

இவை அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் உள்ளன என்றும், இது போன்ற மோசடிகள் நாடு முழுவதும் நிகழ்ந்துள்ளதாக ராகுல் கூறியிருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress Rahul EC BJP


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->