கெஜட் அறிக்கையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு இல்லை. பிரதமர் மனதை மாற்றிக் கொண்டாரா..? காங்கிரஸ் கட்சி கேள்வி..? 
                                    
                                    
                                   Congress party questions whether there is no announcement regarding caste wise census in the gazette notification
 
                                 
                               
                                
                                      
                                            எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு அரசாணையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அரசிதழ் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசின் அரசிதழ் அறிவிப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை. பிரதமர் மனதை மாற்றிக் கொண்டு விட்டாரா..? ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு கெஜட் அறிக்கையில் இல்லை..? என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும். ஆனால் வெறும், 575 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பணம் எங்கே..? என்று ஜெயராம் ரமேஷ் அறிக்கை மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். 
                                     
                                 
                   
                       English Summary
                       Congress party questions whether there is no announcement regarding caste wise census in the gazette notification