பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ் எம்எல்ஏ கைது.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியை விமர்சனம் செய்த எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்த குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அசாம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 11 மணிக்கு அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் அளித்த விளக்கத்தில் குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் மேவானி, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்ததால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் காங்கிரஸ் எம்எல்ஏ மேவானி கைது செய்யப்பட்டதை கண்டித்து குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress MLA arrested for criticizing PM Modi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->