நீயெல்லாம் பேசவே கூடாது.! பா சிதம்பரத்தை நேருக்கு நேர் வெளுத்து வாங்கிய நிர்வாகி.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.

தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பாக சிவகங்கையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா சிதம்பரம் கலந்து கொண்டார். மேலும், இந்த கூட்டத்தில் சிவகங்கையை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது கட்சி நிர்வாகி ஒருவர் பேச முற்பட்டபோது, பா சிதம்பரம் 'உங்களுக்கெல்லாம் பேச அனுமதி கிடையாது' என்று தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நிர்வாகி, 'என்னை பேச சொல்லக் கூடாது என்பதற்கு நீ யார்? எனக்கு அனுமதி தர நீ யார்? நீ என்ன காங்கிரஸ் கட்சியின் சேர்மேனா?

கட்சி நிர்வாகி நான்., நா பேசுவேன்., என்னை பேச சொல்ல கூடாது என்பதற்கு நீ யார்?' என்று ஆவேசமாக கத்தினார். அப்போது ப சிதம்பரம், 'உங்களுக்கெல்லாம் பேச அனுமதி கிடையாது' என்று மீண்டும் சொன்னதையே சொன்னார்.

ஒரு வழியாக அரங்கத்தில் இருந்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் அவரை சமாதானப்படுத்தி ஆலோசனை கூட்டத்தை மீண்டும் தொடங்கினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் இந்த ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress member ask pa chidambarm


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal