திமுகவால் காங்கிரஸ் கட்சிக்கு வந்த சோதனை.. முக்கிய தலைவர் ராஜினாமா.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 10 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கொண்டாடி வருகிறது. மேலும், தமிழக மக்களும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பேரறிவாளன் விடுதலையை திமுக கொண்டாடி வருகிறது. முதலமைச்சருக்கு பேரறிவாளன் நன்றி தெரிவிக்க சென்றபோது, அவரை அரவணைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளது. 

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வாயில் துணியை கட்டிக்கொண்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது. பேரறிவாளன் விடுதலை திமுகவினர் கொண்டாடுவதை வைத்து திமுக கூட்டணியை விட்டு வெளியேற காங்கிரஸ் தயாரா என்று பாஜகவினர் சீண்டி வருகின்றனர். பேரறிவாளன் விடுதலையானதும், திமுகவினர் கொண்டாடி வருவதும் காங்கிரஸிற்கு கடும் அதிருப்தி ஆகவே உள்ளது. 

மேலும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனிடையே திமுக கூட்டணிக்கு பங்கம் வராத வகையில் அந்த விமர்சனங்கள் உள்ளது. இந்நிலையில், பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிற்றரசு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், உலகம் போற்றும் உத்தம தலைவர் அமரர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலை குற்றவாளியை கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை என் மனம் ஏற்கவில்லை. எனவே நான் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். எனது பதவி விலகலை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress district leader resign


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->